ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
எண்ணமங்கலம் ஊராட்சியில் 15 தூய்மை பணியாளர்களும் மைக்கேல்பாளையம் ஊராட்சியில் 22 பேரும் கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் 10 பேரும் சங்கராப்பாளையம் ஊராட்சியில் 9 பேரும் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்று சென்றனர்.
நிகழ்வில் கெட்டிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் மாரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், செல்வி, சக்திவேல், விண்ணமங்கலம் அரசு மருத்துவர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வன், ஊராட்சி செயலர்கள் மணிமுத்து, பெரியசாமி, சுப்பிரமணியம், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர்
எஸ் திருபாலா.