திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொள்கை பரப்புச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்இன ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் சாதிய வன்கொடுமை நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவி சரிதாவிற்கும் சாதிய வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சரிதாவுக்கு பாதுகாப்பு கருதி துப்பாக்கி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்…
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர்பேரவை திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் காளிராஜ்,சுந்தரம் உள்ளிட்ட பெரியார் இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.