புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராம சேதுபதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக சுரேஷ் கண்ணன், மாவட்ட செயலாளராக முருகேசன் மற்றும் புதிய நிர்வாகிகளாக அறந்தை அண்ணாதுரை குமரேசன், அபிராமி மௌனிகா, உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட அனைத்து சட்ட திட்டங்களின் நன்மைகளையும் அவைகளின் அம்சங்களையும் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், சமூகத்தில் மத பிரிவினையை உண்டாக்கி சமூகத்தில் கலவரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உண்டாக்கி வரும் காங்கிரஸ் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கண்டிப்பதோடு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி