புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியும், ஊராட்சியும் ஆகும்.
இப்பகுதியில் சுமார் 52 பஞ்சாயத்துகளை கொண்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் புதியதாக பொறுப்பேற்றுள்ள
சார்ஆட்சியர்
மோகன்ஆனந்த் தலைமையில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரிசண்முக
நாதன் ஒன்றியதுணை பெருந்தலைவர்
சுதாபொன்கணேசன் ஆகியோர் முன்னிலையில் தற்பொழுது உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக கிராமப்புற பகுதிகளில் எவ்வாறு முன்னேற்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட 52 உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம உதவியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்
சார்ஆட்சியர்
ஆனந்த்மோகன் பேசுகையில்…..
தாங்கள் சார்ந்திருக்கும் கிராமப்புற பகுதிகளில் கோவிட்19 தொடர்பான முன்னேற்பாடுகள் எவ்வாறு நடைபெற்றுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அறந்தாங்கி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி பெரியசாமி மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இறுதியாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் கிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.