திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்ந்த கட்சியினர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமையில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மருத்துவ மாணவர்களை வஞ்சிக்காதே என்பது போன்ற கோஷங்கள் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரபு திருப்பத்தூர் நகர செயலாளர் பரத் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி அனைவரையும் கைது செய்து ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர்.
திருப்பத்தூர் செய்தியாளர் சுஜாதா