வாணியம்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட்தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் பஜார் பகுதியில் உள்ள இந்திய அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது
கைது செய்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.