கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று பாஜக உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் நிர்வாகி அண்ணாமலை வருகை அளித்தார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை, மணிமகுடத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
எனவே ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் சேர்த்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக அண்ணாமலை உட்பட நந்தகுமார், செல்வகுமார், சேகர், கனகசபாபதி ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் 5 பிரிவின் (ஊரடங்கு விதி மீறல், ஐபிசி செக்சன் 143, 341, 269, 285) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா