பவானி ஜம்மையில் மூன்று அமைச்சர்களிடம் அசில்இன நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆர்வமாக பெற்ற பயணாளிகள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பெண் பயனாளிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (2019-20) அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை வகித்தார் கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார் இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரூ. 8.70 லட்சம் மதிப்பீட்டில் 419 பயனாளிகளுக்கு அசில்இன நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கி சிறப்பித்தனர்.
பெண் பயணாளிகள் மிகுந்த ஆர்வமாக கோழி குஞ்சுகளை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேலு, மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு : பவானி
ஜி. கண்ணன்