
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பொன்னேரி டாஸ்மாக் கடை அருகில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றதாக பெண்ணாடம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த் என்பவரை பெண்ணாடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.