ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆப்பக்கூடலில் நடைபெற்ற விழாவில், 300 நபர்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.
ஆப்பக்கூடல் தனியார் திருமண மண்டபத்தில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விலையில்லா கோழி குஞ்சு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட 300 நபர்களுக்கு 25 கோழி குஞ்சுகள் வீதம் 7 ஆயிரத்து 725 குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ். கால்நடைத்துறை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ். திருபாலா.