புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை தமிழக பகுதியான புத்துரையில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது
புதுச்சேரி கல்மேடுப்பட்டை சேர்ந்தவர் கோபால்தாஸ். வயது 45. பிரபல ரவுடியான இவர் காங்கிரஸ் பிரமுகர் மாயவன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார் மேலும் இவர் மீது புதுச்சேரியில் பல வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள தனது 2 ஆவது மனைவியின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்,
அப்போது நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல் இவரை தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சராமரியாக வெட்டி அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்,
இதனை அடுத்து அவரின் மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அருகே வசிப்பவர்கள் வானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து வானூர் போலிசார் மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனை அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு புதுச்சேரி மாயவன் கொலை சம்பவத்திற்க்கு பழிக்கு பழியாக தற்போது கோபால்தாஸ் கொலை நடந்துள்ளதா என்ற கோனத்திலும் வானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சு.ஆ. ராஜசேகர்
புதுச்சேரி