
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று, 26/11/2024 பயனாளிகள் நல சங்கம் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மற்றும் சத்துணவுடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.மாவட்ட சுகாதார அலுவலர் திரு சத்தீஷ்குமார் உத்தரவிற்கு இணங்க வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் மேற்பார்வையில், கர்ப்பிணி பெண்கள் 15 பேர்களுக்கு உணவும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் சௌமியா மடம் பஞ்சாயத்து தலைவர் தரணி பகுதி சுகாதார செவிலியர் மாயாவதி சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார் செவிலியர்கள் தேன்மொழி இருசம்மாள் ஈஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.