தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஐநூறு 108 ஆம்புலன்ஸ்கள் தயாராகி வருகின்றன சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்…..
லேசான காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் சங்கோஜப்படாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். லேசான அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களை எளிதில் குணப்படுத்த முடியும் . எனவே ஆரம்ப நிலையிலேயே பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இந்த வசதி உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்எம்எஸ் வசதி ஏற்படுத்தப்படும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ரேக்ஸின் மருந்துகளை செலுத்தி சோதனை அனுமதி கிடைத்துள்ளது. இதனால் 150 பேருக்கு மருந்தை செலுத்தி சோதனை செய்ய பணிகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை 108 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் துவங்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.