கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கொளுத்திகொட்டாய் கிராமத்தில், வீட்டிலேயே போலி மதுபானங்கள் தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பது உறுதியானது.
இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (40), சரவணன் (45) ஆகிய இருவரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய 105 லிட்டர் எரிசாராயம், ரசாயனங்கள், லேபிள்கள், மூடிகள் மற்றும் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.