திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியுள்ளதால் நாயுடுபுரம், வில்பட்டி, அட்டுவம்பட்டி , பாம்பார்புரம் பகுதிகளில் அதிக அளவில் பேஷன் ப்ரூட் பயிரிடப்பட்டு சந்தைக்கு வர துவங்கியுள்ளது . இந்த பேஷன் ப்ரூட் கொடியில் விளையக்கூடியது ஒரு கொடியில் சுமார் 1000 முதல் 2000 பேஷன் ப்ரூட் கிடைப்பதாகவும் எந்த ரசாயனங்களும் பயன்படுத்த தேவையில்லை என்றும் தற்பொழுது ஒரு பேஷன் ப்ரூட் ரூ 7 க்கு பழக்கடைகளுக்கு மொத்த விலையில் தருவதாகவும் இதனால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும்
மேலும் இந்த பேஷன் ப்ரூட் நல்ல மருத்துவகுணம் கொண்டது என்றும் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை அதிகரிக்கவிடாமல் தடுக்கும் என்றும் இங்கு விளையும் பேஷன் ப்ரூட் அதிக அளவில் பெங்களூரு, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தினமும் கொடைக்கானலிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாகவும் கிலோ ரூ 150 வரை விற்பதாகவும் கிலோவிற்கு 10 முதல் 15 பழங்கள் இருக்கும் என்றும் தற்பொழுது மலைக்கிராம விவசாயிகள் பேஷன் ப்ரூட் கொடிகளை அதிக அளவில் பயிரிட துவங்கியுள்ளதாகவும் இது சிறந்த ஊடு பயிராகவும் அதிக லாபம் கிடைப்பதாகவும் வியாபரிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல் செய்தியாளர் அருண்