ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை வட்டாட்சியர் மற்றும் போலீசார் துரத்திப் பிடிக்கச் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் அதிகாரிகள் வருவதை அறிந்த ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வீட்டை அவசர அவசரமாக பூட்டிவிட்டு மினி வேனை வேகமாக ஓட்டிச் சென்றனர் அப்போது ரேஷன் அரிசி கடத்தி சென்ற மினி லாரியை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காட்சியாக பதிவு செய்ய முயன்ற போது ஓட்டுனர் மினிலாரியை செய்தியாளர் மீது ஏற்றி கொல்ல முயற்சித்து தப்பிச் சென்றுள்ளனர் பின்னர் ரேஷன் அரிசியுடன் தப்பி சென்ற மினி லாரியை தகவலின் பேரில் வட்டாட்சியர் செண்பகவல்லி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் 3 கி.மீ தூரம் துரத்தி சென்ற போது வாணியம்பாடி அடுத்த மாராபட்டு கூட்டு சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார் சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலிசார் விசாரனை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர் மேலும் வாணியம்பாடி நியூ டெல்லி பகுதியில் தொடர்ந்து பட்டப்பகலில் லாரி மற்றும் மினி வேன் மூலம் ரேஷன் அரிசி கடத்தி வருவது வாடிக்கையாகி உள்ளதாகவும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.