இந்திய ஹாக்கி வீரர் தியான்சந்த் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆக்சிஜன் அந்தியூர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பேரணியை, அந்தியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தலைமையாசிரியர் பானுமதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன்
ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி ஓட்டப் பந்தயத்தை துவக்கிவைத்தார்.
அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி, விளையாட்டின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
அந்தியூர் ஆண்கள் அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி தேர்வீதி வழியாக தவிட்டுப்பாளையம், பஸ் நிலையம், பர்கூர் சாலை வழியாக சென்று மீண்டும் அரசுப் பள்ளியை அடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்ட விளையாட்டு ஆர்வலர்கள் மாணவர்கள் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர்.
இதில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் மற்றும் ஆக்சிஜன் அந்தியூர் அறக்கட்டளையினர் திரளாக கலந்து கொண்டனர்.