ஐஓசிஎல் எரிவாய்வு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமத்திற்குள் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் நுழைய முடியாதபடி ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கிராமத்தை விட்டு அக்கிராம மக்கள் வெளியே வர முடியாத அளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டம்
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு கிராமமானது சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்துவரும் விவசாய கிராமம் ஆகும்
இந்த கிராம மக்கள் விவசாயத்தையும், உப்பு உற்பத்தியையும் நம்பி பிழைப்பு நடத்தி வருபவர்கள் இந்த கிராம மக்கள் .
இந்த நிலையில் ஐஓசி எரிபொருள் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை இக் கிராமம் வழியாக கொண்டு வந்ததால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது இதில் 500 மீட்டர் தொலைவில் குழாய்கள் பாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் இந்த நிலையில் இன்று IOCL நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஊருக்குள்ளேயே குழாய்கள் பதிக்க இயந்திரங்களை கொண்டு தோண்டி குழாய் பதிக்க வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்
ஆனால் கிராம மக்கள் போராட்டம் நடத்த கிராமத்தை விட்டு வெளியே வர முடியாத அளவு போலீசார் தடுப்புகளை அமைத்து கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் செல்ல முடியாதபடி பலத்தைப் போலீஸ் பாதுகாப்பு பலத்த போலீஸ் குவிப்பு செய்து கிராம மக்களை அச்சுறுத்தினர் மேலும் அலகாபாத்தில் உள்ள கோவில் முன்பு உள்ள மண்டப வளாகத்தில் மக்கள் கூடி உண்ணாவிரதம் இருந்து விடக்கூடாது என்று அங்கும் தடுப்புகள் அமைத்து மக்களை விடாதபடி செய்துள்ளனர் இதனால் கிராம மக்கள் தங்கள் வீடுகளிலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்
அரசின் திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை ஆனால் எங்களது கிராமம் வழியாக அருகில் கொண்டு செல்லாமல் தொலைவில் குழாய் பதித்து சென்றால் எங்களுக்கு ஒன்றும் இல்லை மிகவும் அபாயகரமான வெடித்து சிதற கூடிய எங்கள் வீடுகள் அருகிலேயே குழாய்கள் பாதிக்கப்படுவதால் உயிருக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது எனவே இந்த குழாய் பதிப்பு பணியை எங்கள் கிராமத்தை விட்டு தொலைவில் கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து தங்கள் வீடுகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் மேலும் இந்த ஐஒசிஎல் குழாய் பதிப்பு இருக்கு எங்களது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பஞ்சாயத்து வேலைகளில் இருந்த எங்களது கிராம மக்களை (பிடிஓ) வட்டார வளர்ச்சி அலுவலர் வேலையை விட்டு நீக்கி விட்டார் எனவும் குற்றம் சாட்டி உள்ளனர் கிராம முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது