ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், உளவுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல், காவலர்களான நித்தியானந்த், நாகராஜ் ஆகியோருக்கு கடந்த 3-ம் தேதி கொரானா நோய் தொற்று பரிசோதனையில் உறுதியானது.
பின்னர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று நோய் தொற்றிக் இருந்து பூரண குணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 26நாட்களுக்கு பின்னர் இன்று பொறுப்பு ஏற்க காவல் நிலையம் வந்த இவர்களுக்கு பவானி போலீசார் சிவப்பு கம்பளம் விரித்தும், மாலை அணிவித்தும், மலர் தூவி, இனிப்புகள், பழங்கள் வழங்கி சிறப்பான முறையில் வரவேற்றனர். அதேபோல் பவானியில் உள்ள தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு ஒரு நோய் தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்த அவருக்கும் பவானி பத்திரிக்கையாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.