மேட்டுப்பாளையம் , காரமடை பகுதிகளில் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி உட்பட5 பேர் கைது. ஆயுதங்கள் பறிமுதல்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை மற்றும் சிறுமுகை பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும்பெண்களை கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது,
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர், இந்த நிலையில்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காரமடை அருகே கெம்பனூரில் வீட்டில் தனியாக இருந்த அனிதா என்ற பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி 9 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து கொள்ளையர்களை தேடி வந்த
போலீசார் காரமடையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பிடித்து விசாரணை செய்த பொழுது பல்வேறு தகவல்கள் கிடைத்தது.
அதில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமையில்
8 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு தனிமையில் இருக்கும் பெண்கள், வசதியானவர்கள் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது,
மேலும் இந்த கும்பல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமுகையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு அவரது வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையில் நுழைந்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தும் தெரிய வந்தது,
முதலில் ஆறுமுகம் என்பவரை கைது செய்த போலீசார் பின்னர் இவர்களது கூட்டாளிகளான சரவணக்குமார், ரவீந்திரன், ஆனந்தராஜ், பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனாக செல்பட்டு வந்த சரவணக் குமார் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் என்பதும் தெரியவந்தது. கைது
செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை மேட்டுப்பாளையம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.