திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்றிமலை கிராமம் சோலைக்காடு பகுதியில் 3 சருகுமான்கள் மற்றும் ஒரு காட்டுப் பூனையினை வேட்டையாடி கறியாக வெட்டி TN 93 6225 வாகனத்தில் புல்லாவெளி இருந்து சித்தரேவு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கன்னிவாடி வனப்பணியாளர்களால் மடக்கிப்பிடித்து எதிரிகள் மற்றும் பிடி பொருட்களை கன்னிவாடி வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கில் தொடர்புடைய எதிரிகளான
1.ராஜமாணிக்கம்,
த/பெ.சின்னச்சாமி, அக்கரைவளைவுபட்டி, பெரிய கோவிலூர் அஞ்சல், தின்னனூர்நாடு, நாமக்கல்.
2.ரவிச்சந்திரன்,
த/பெ.அய்யாச்சாமி, மூலவளவுப்பட்டி, பெரியகோவிலூர் அஞ்சல், தின்னனூர்நாடு, நாமக்கல்
3.சதிஷ்,
த/பெ.பழனிச்சாமி, மூலவளவுப்பட்டி, பெரியகோவிலூர் அஞ்சல், தின்னனூர்நாடு, நாமக்கல் ஆகியோர்கள் மீது வனஉயிரின குற்ற வழக்கு எண் 07/2025 பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் A1 எதிரியான ராஜமாணிக்கம்,
த/பெ.சின்னச்சாமி, அக்கரைவளைவுபட்டி, பெரிய கோவிலூர் அஞ்சல், தின்னனூர்நாடு, நாமக்கல் என்பவர் கன்னிவாடி வனச்சரக ஆளில்லா வன உயிரின குற்ற வழக்கு எண். 03/2025 -ல் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டு இவ்வழக்கு குறித்தும் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.