புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
தங்களுக்கு நிரந்தர படி வழங்க வேண்டும் அதுபோக எங்களுக்கென்று மருத்துவமனையில் ஆண்பணியாளர், பெண்பணியாளர் என பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கென தனி அறை ஏதும் இல்லை.
சில மாவட்டடங்களில் 108 ஆம்புலன்சில் ஏதாவது சிறு கோளாறு என்றால் அதை நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதற்கு நாங்கள் பொறுப்பல்ல வாகனம் நன்றாக இருந்தால் நாங்கள் இயக்கவும் என்று கூறுகின்றனர் அதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 26 ஆம்புலன்ஸ் வாகனம் இருக்கின்றது குறிப்பாக இரண்டாவது பெரிய நகராட்சி பகுதியான அறந்தாங்கி அதையடுத்துள்ள மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளயும் சேர்த்து மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் தான் இயக்கபடுகிறது.
மேலும் விடுமுறை சம்பளம் வழங்காமல் விடுப்பு எடுக்க சொல்லி கட்டாயபடுத்தும் CVK-EMRI நிர்வாகத்தை கண்டித்தும் 108 வாகன ஒட்டுனர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.