நாட்றம்பள்ளி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவன் கற்பழித்ததால் விபரீதம்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியா (17) என்ற பள்ளி மாணவி ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் ராகுல்காந்தி (20) என்ற வாலிபர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
காதலிப்பதாக கூறி ராகுல்காந்தி அடிக்கடி பிரியாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பு வகுப்புகாக பள்ளிக்கு சென்ற பிரியா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தாயார் பரிமளா அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.
அப்போது கோவிந்தசாமி மகன் ஜீவா என்பவரது வீட்டில் பிரியாவை ராகுல்காந்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டிற்கு செல்லாமல் இருந்த பிரியாவை தேடி அவரது தாயார் சென்றபோது ஊரே வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பிரியா அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் பிரியாவை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராகுல் காந்தி, ஜீவா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.