புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காந்தி சிலையின் அருகே மறைந்த மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு H.வசந்தகுமார் அவர்கள் மறைவிற்கு நாடார் உறவின் முறை சங்கத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காந்தி சிலையின் அருகே மறைந்த மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு H.வசந்தகுமார் அவர்கள் மறைவிற்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
பொன்னமராவதி நகர காங்கிஸ் கமிட்டி ஏற்ப்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பொன்னமராவதி நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.