மலையாள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம். வழக்கமாக ஒரு வாரத்திற்கு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் என்பதால் கோவில்களுக்குள் மக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று அரசு அறிவித்ததால் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படுவதில்லை.
இந்நிலையில் கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த கோவிலில் ஓணம் பண்டிகை வருடம்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். காலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து தீபம் ஏற்றி வழிபடுவர். அனைவருக்கும் தீபாராதனை, பிரசாதங்கள், வழங்கப்படும். ஆனால் இம்முறை இதற்கு முற்றிலும் மாறுதலாக ஓணம் பண்டிகை கலையிழந்து காணப்பட்டது. குறைந்தளவு மட்டுமே பக்தர்கள் காணப்பட்டனர்.
பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனர். பகதர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்குள் குருமார்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜை புனஷ்காரங்கள் செய்தனர். இதை பக்தர்கள் அனைவரும் வெளியில் நின்றவாறே கண்டு களித்தனர்.இதனால் இந்த ஆண்டு ஓனம் பண்டிகை பொழிவிழந்து காணப்பட்டது.
கொரொனா காலம் கோவிலினுள் சென்று வழிபடாதது வருத்தம்.. எனினும் கொரோனா என்பதால் இம்மாதரியான வழிபாடும் நன்மைக்கே என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருப்பது நல்லது என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.