மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறரு. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பாசந்த்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு 6,739 மி.ககனஅடி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்திறப்பின் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.