ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் அருகே மோட்டார் சைக்கிள், லாரி, கார் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
பலமனேர் அருகே சித்தூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூருக்கு இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்துவதற்காக பிரேக் போட்டார்.
அப்போது நெல்லூரில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும், காரில் இருந்த நெல்லூரை சேர்ந்த சீனிவாசலு ரெட்டி, ரத்னம்மா, வெங்கடேஸ்வரலு ஆகியோர் விபத்தில் காருக்குள்ளேயே நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த பங்காருபாளையம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.