நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முரளி மற்றும் சுரேஷ் தரப்பிற்கு முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முரளி தரப்பினர் மற்றுமொரு தரப்பினர்
திருப்பதி, சுரேஷ் , கருத்தபாண்டி ஆகிய மூவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தையும் தீவைத்து எரித்து விட்டு முரளி தரப்பு தப்பியோடியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த கல்லிடை குறிச்சி போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.