திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது
உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற மக்களுக்கு திண்டுக்கல் முஜீப் பிரியாணி மற்றும் நண்பர்கள் சார்பில் நேற்று திண்டுக்கல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணிமாறன் அவர்கள் மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
தற்சமயம் அரசு அறிவித்துள்ள வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு என்பதால் ஆதரவற்றோர் உணவுக்காக பெரிதும் சிரமப்பட்டு வந்தனர் அவர்களுக்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்பட்டது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.
இதற்கு திண்டுக்கல் வாழ் சமூக ஆர்வலர்கள் ஊரடங்கு முடிந்து எல்லோரும் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் பசி பட்டினி ஒழிய வேண்டும் கொரோனா நோய்க்கு விரைவில் மருந்து கண்டுபிடித்து அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழங்கி உள்ளனர்.