கோக்கு மாக்கு

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களை மலர்தூவி வரவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா பாதிப்பிலிருந்து பணிக்குத் திரும்பிய பெண் காவலர்கள் உட்பட 9 காவலர்களுக்கு சான்றிதழ்கள் பழங்கள் கொடுத்து மலர்தூவி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்பு.

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வருகிறது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியிலிருந்த சிகிச்சை முடிந்து சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர்பூரண குணமடைந்து இன்று 31.08.2020 பணிக்கு திரும்பினர்

இவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா சான்றிதழ் மற்றும் பழங்களை வழங்கி வரவேற்றார் . மேலும் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் நலன் குறித்து விசாரித்தார். அங்கிருந்த காவல்துறையினர் வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்களுக்கு மலர் தூவி, கைதட்டி வரவேற்றனர்.

செய்தியாளர்
ரியாஸ் கான்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button