திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 15 நாட்கள் மட்டும் மாவட்டத்திற்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் சமூக இடைவெளி கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்ய இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தொற்றுநோய் அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து பொது போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட ஊரடங்கு காலங்களில் படிப்படியாக கடைகள் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டது.
இதனுடைய தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் மட்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொது போக்குவரத்தை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் பொதுப் போக்குவரத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் வேடசந்தூர் நிலக்கோட்டை நத்தம் வத்தலகுண்டு உள்ளிட்ட 8 பணிமனைகளில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துகள் இயக்குவதற்கு தயார்படுத்தும் வகையில் பழுதுபார்க்கும் பணிகளில் போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள எட்டு பணிமனைகளில் 265 பேருந்துகள் உள்ளது.