ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வட்டக்காட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விதவை பெண்ணின் நிலத்தை அபகரிக்க மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுக்கா தலைவர் முருகன், செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
இதில், எண்ணமங்கலம் கிராமம், நரிப்போன் தோட்டத்தில் வசிக்கும் தலித் விதவைப்பெண் செல்வி என்பவரையும். அவரது மகனையும் மிரட்டி பஞ்சமி நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.