புதுச்சேரி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச மனைப்பட்டா வழங்ககோரி 100க்கும் மேற்பட்டோர் சாலையில் சமைத்து உண்ணும் நூதன போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுச்சேரி அருகே சந்தை புதுகுப்பம் கிரமம் உள்ளது இக்கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத் துறை சார்பில் இலவச மனைப்பட்டா வழங்க அதே பகுதியில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இதுவரை அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் இலவச மனைப்பட்டாவை விரைந்து வழங்கக்கோரியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்தி தரக்கோரி இன்று 100க்கும் மேற்பட்டோர் சாலையில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இலவச மனைப்பட்டா வழங்குவது தொடர்பாகப் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
சு.ஆ. ராஜசேகர்
புதுச்சேரி