நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம், பவானி தாலூக்காவிற்க்கு உட்பட்ட பெரியபுலியூர் கிராமத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் வீட்டின் முன்பு இணைய தள வழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தமிழ்வளவன் தலைமை தாங்கினார். கோபி சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் திருமா பூபதிராஜா, நவீன்குமார், கைலாஷ், முகுந்தன், அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு பவானி
ஜி. கண்ணன்