கோவை தடாகம் சாலை கணுவாயில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை இரவு இரண்டு மணியளவில் யானை ஒன்று தாக்கி உள்ளது. அதில் அச்சம் அடைந்த அவர் கோவில் வளாக வாட்ச் மேனிடம் 4 மணி வரை அடிக்கடி தண்ணீர் கேட்டு அருந்தியுள்ளார். அதன் பின் வாட்ச் மேன் அங்கிருந்து சென்றுவிட்டு 5:30 மணி அளவில் மீண்டும் கோவில் வளாகத்திற்கு வந்து பார்க்கையில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜ்(55) என்பது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த அவரது உறவினர்கள் இறந்தது நாகராஜ் என்பதை உறுதிசெய்தனர் அதனைத் தொடர்ந்து அவரது உடலானது கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(இறந்தவர் வீட்டில் பிரச்சினை என்பதால் பல வருடங்களாக தனியாக வசித்து வந்ததும் கோவில் வளாகத்திலேயே உறங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது)
யானை தாக்கும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா