ஈரோடு மாவட்டம், பவானி புதிய பஸ் நிலையம் அருகில் பெருமாள்புரம் உள்ளது. இப்பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில், மூத்த மகன் விஜய பாலாஜி (24) சரிவர வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோரிடம் செலவிற்கு ரூ 3000 தர வேண்டும் என கேட்டுள்ளார். அதை மறுத்த பெற்றோர் வேலைக்குச் செல்லாமல் விளையாடி கொண்டு இருக்கிறாயா என கண்டித்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட விஜய பாலாஜி தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் இரும்பு கம்பியில் சீலையை கொண்டு தூக்கில் தொங்கி உள்ளார். இதனை கண்ட பெற்றோர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு பவானி
ஜி. கண்ணன்