நீலகிரி மாவட்டம்
குன்னுாரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று குன்னுார் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான பர்லியார் காட்டேரி சேலாஸ் அரவங்காடு பாய்ஸ்கம்பெனி பிக்கட்டி போன்ற பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக மழைபெய்தது ,
மழையின் காரணமாக குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் வாகனங்களை இயக்க வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்தனர் இ்நத மழையினால் தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்பதால் தேயிலை விவசாயிகளும் காய்கறி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் , மேலும் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்