*தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*இன்று (31.08.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மதுரை, தென்மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வக்கூட்டத்தின்போது திருநெல்வேலி டி.ஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மற்றும் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திரு. கோபி ஆகியோர் உடனிருந்தனர்.*
*இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த காவலல்துறையினர் 10 பேருக்கு பழக்கூடை மற்றும் சான்றிதழ் வழங்கி, அவர்களது பணி சிறக்க வாழ்த்தினார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மொத்தம் 45,000 முக கவசங்களை அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் வழங்கினார்.*
*சிறப்பாக பணியாற்றியமைக்காக வெகுமதி பெற்றவர்கள் விபரம் : – கடந்த 16.07.2020 அன்று அதிகாலை 01.00 மணியளவில் தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்த போது, காரின் உள்ளே இருந்த மூன்று நபர்களை விசாரித்ததில், அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏழு கொலை வழக்குகள் உட்பட 26 வழக்குகளில் சம்மந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார்(37), பாயைங்கோட்டை படைப்பைகுறிச்சியைச் சேர்ந்த வினோத் மற்றும் திருநெல்வேலி கொக்கிரக்குளம் மேலநத்தத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்து அவர்களிடமிருந்து உரிமம் பெறாத கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்களை கைப்பற்றியும் மேற்படி எதிரிகளை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இசக்கிராஜா, காவலர் திரு. வைரமுத்து ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,*
*கொரோனா பெருந்தொற்று காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிந்த நபர்களுக்கு முகக் கவசம் அணிவித்தும் உணவு பொட்டலங்கள் வழங்கியும் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகளின் பாராட்டை பெற்ற முத்தையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. சேர்மராஜ் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்*
*கடந்த 17.07.2020 அன்று தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேவிஸ்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் லோக ஆனந்த்(26) என்பவர் அவரது வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த சுமார் 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றியும், அவரிடம் விசாரணை செய்து அவரிடம் கிடைத்த தகவலின்படி சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த சின்னகருப்பசாமி மகன் மாடசாமி(80) என்பவரது வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் திரு. சக்திமாரி முத்து, திரு. அய்யப்பன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*கடந்த 14.08.2020 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி சாலையில் போலீசார் வாகன சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த கனகராஜ் ஆகிய இரு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த 50 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட ‘சரஸ்” என்ற போதைப் பொருட்களை கைப்பற்றிய திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஸ்டீபன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கணபதி, தலைமைக் காவலர் திரு. இசக்கியப்பன், ஆத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. எழில் நிலவன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும் வெகுமதி பெற்றனர்.*
*கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியவர்கள் விபரம் : –*
*தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி, மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. அப்பாதுரை, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன், எப்போதும்வென்றான் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. சுடலைமுத்து, திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு முதல்நிலைக் காவலர் திரு. இசக்கிமுத்து, சிப்காட் காவல் நிலைய காவலர் திரு. ராஜலிங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் திரு. பொன் ராஜன், முதல் நிலை காவலர் திரு. பாலகிருஷ்ணன், காவலர்கள் திரு. விசு, திருமதி. ஆர்த்தி ஆகியோர்கள் பழக்கூடை மற்றும் சான்றிதழ் பெற்றனர்.*
*இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொறுப்பு திரு. பழனிக்குமார் , திருச்செந்தூர் திரு. பாரத், ஸ்ரீவைகுண்டம் திரு. வெங்கடேசன், மணியாச்சி திரு. சங்கர், கோவில்ப்பட்டி திரு. கலைக்கதிரவன் , விளாத்திக்குளம் பொறுப்பு திரு. நாகராஜன், மாவட்ட குற்ற பிரிவு திரு. பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு திரு. இளங்கோவன், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.*