சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோபியில் உள்ள பாரியூர் திருக்கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்…..
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் படி தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வழிபாட்டு் தலங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம்
பாரியூர் கோவிலில் அரசின் வழிகாட்டுதலின்படி கோவில் திறக்கப்பட்டது.
எப்போதும் அதிகாலை முதலே கூட்டம் நிறைந்து வழியும் இக்கோயிலில் இன்று சுமார் 50 க்கும் குறைவான பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும்
கிரிமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று கோவில்கள் திறக்கப்பட்டும் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் ராமசந்திரன்