கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த வழிபாட்டு தலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இன்று மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சுவாமி தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும் , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .