ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் ராயல் பெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கோவை மற்றும் ஈரோடு வருமானவரித்துறை அலுவலக அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டி அருகில் செயல்படும் ராயல் பெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையம் செயல்பட்டுவருகிறது. இதன் உரிமையாளர் சோமசுந்தரம் ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கோவை மற்றும் ஈரோட்டிலிருந்து வந்திருந்த வருமானவாரித்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் உதவியுடன் திடீர் என சோமசுந்திரத்தின் வீட்டினுள் நுழைந்து சோதனை மேற்கொள்ளத்தொடங்கினர். அதனை தொடர்ந்து ஸ்ரீநகரின் அருகில் அமைந்துள்ள ராயல் பெர்டிலைசர் என்ற அவரது நிறுவனம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர். நிலம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உர விற்பனையில் கொள்முதல் விற்பனை மற்றும் வருமான வரி உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கணக்கில் வதராத ரூ.4 கோடி ரொக்கம் வீட்டில் இருந்தாகவும் ரூ.4 கோடியையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் 12 பேருக்கு சொந்தாமான காலியிடம் கோபிசெட்டிபாளையம் மின் நகரில் இருந்ததை நேற்று விற்பனை செய்ததாகவும் 12 பேருக்கு பரித்து கொடுக்கவேண்டிய தொகை ரூ.4 கோடி வீட்டில் வைத்திருந்த போது வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் அப்பணம் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சோமசுந்திரத்திரம் தரப்பிரனர் தெரிவித்துள்ளனர். உர விற்பனை நிலைய உரிமையாளர் வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை செய்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி செய்தியாளர் ராமசந்திரன்