கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.
முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை ஒட்டி அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
பிரணாப் முகர்ஜியின் பொருளாதார சிந்தனைகள் நாட்டிற்கு உறுதுணையாக இருந்தது என்று முருகன் கூறினார். சட்டமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியில் பா.ஜ.க செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,
திமுகவில் இருந்து பல சீனியர் தலைவர்கள் பா.ஜ.க வை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய முருகன், டிசம்பர் மாதத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும் என்றும் கூறினார். 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க வை சேர்ந்த கணிசமான நபர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர்,
கூட்டணியை பொருத்தவரை பிரச்சனையும் இல்லை கூட்டணியான பலமாக இருப்பதாக தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்த முருகன், சசிகலா சொத்து முடக்கம் சட்டபடியாந நடவடிக்கை என்றும் கூறினார்.
சமூக இடைவெளி கடைபிடிக்காமல இருப்பது தொடர்பாக வழக்குகள் போட வேண்டும் என்றால்
அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ ,எம்.பி மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு போட வேண்டி இருக்கும் என்றும்
தமிழக அமைச்சர்கள் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா