கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து தலைவர் நாரயணமூர்த்தி தலைமையில் ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியத்தை உள்ளடக்கிய ஓவியத்தொகுதியை கண்டறிந்தது.
இந்த செஞ்சாந்து ஓவியம் குறித்து, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறியதாவது..
கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஆஞ்சநேயர் மலையின் உச்சிப்பகுதியில், கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்களிலேயே மிக முக்கியமான பாறை ஓவியத் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது. செந்சாந்து ஓவியம் புதிய கற்கால கலாச்சாரங்களை கொண்டதாக உள்ளது. செத்தவரை போல இதுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் 9 அடி நிளமுள்ள செங்காவி நிற வண்ணத்தில் மயில் ஓவியம், பாய்ந்து வரும் மாடு, உடும்பு, கழுதைப்புலி ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளது. இத்தோடு கொக்கு, குரங்கு, மான் போன்ற விலங்குகள் பிற்காலத்தில் புதிய கற்காலம் தொடங்கி பெருங்கற்காலம் வரை மக்களின் முக்கிய வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும். இதில் உள்ள இக்கழுதைபுலி உருவம் பற்றி காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்கள் குறிப்பிடும்போது அலங்காரத்துடன் இந்த ஓவியமானது காணப்படுவதால் இது ஒரு கற்பனை உருவமாய் இருக்கலாம். இத்தகைய கற்பனை உருவங்கள் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதாகத் தெரிவித்தார். இது குறித்து
வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில்,
இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்பாடாத 9 அடி நீளமுடைய செங்காவி ஓவியமாக மயில் தோகை, கொண்டை, அலகு போன்றவை அழகாக தெரியும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. இது செங்காவி நிறத்தில் வரையப்பட்ட பறவை ஓவியங்களில் இந்தியாவிலேயே பெரியதாக இருக்ககூடும். மேலும் ஒரு புலியின் உருவமும் வரையப்பட்டுள்ளதாக கூறினார். இவ்ஓவியத் தொகுதி பற்றிய ஆய்வு தேவை எனவும் அவர் கூறினார்.
தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் அவர்கள் கூறுகையில், உடும்பு மிகச்சிறப்பான ஆய்வுக்குறி செங்காவி ஓவியத்தொகுதியாகும். இதில் மேற்பகுதியில் ஒரு உடும்பின் ஓவியம் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது. பாய்ந்து செல்லும் வகையில் மாடு காட்டப்பட்டுள்ளது. கை உருவமும் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே தெளிவற்ற நிலையில் 4 உருவங்கள் காணப்படுக்ன்றன எனவும் கூறினார்
இந்த ஆய்வுப்பணியின் போது வரலாற்று ஆய்வாளர்கள் சுகவனமுருகன், சதாநந்த கிருஷ்ணகுமார், மாருதி மனோகரன், விஜயகுமார், ரவி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சௌந்தர்யா, ஆறுமுகம் சுப்பிரமணி, மற்றும் கொத்தபேட்டை ஊர் மக்களும் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி செய்தியாளர் ரிஸ்வான் பாட்சா