இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தலைவலி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற உபாதைகள் இருந்தால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாமாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சுய சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.
அப்படி மேற்கொள்ளும் பட்சத்தில் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வரும் போது கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார். எனவே மேற்சொன்ன உடல் உபாதைகள் இருக்கும் பட்சத்தில் பொது மக்கள் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிகிச்சைக்கு சென்றாலே தங்களைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு,
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்