எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோபிநாத் ( 31) என்கின்ற வாலிபர் தலையில்
மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி – கந்துவட்டி கொடுமையால் பாஜக மாவட்ட நிர்வாகி மீது பரபரப்பு புகார் தான்தோன்றிமலை போலீசார் விசாரணை
கரூர் தாந்தோணிமலை காவல் நிலைய சரகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 12.50 அளவில் இருசக்கர வாகனத்தில் அந்த நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயை பற்ற வைக்க முயன்றார்.
அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை காப்பாற்றி விசாரித்தனர்.
விசாரணையில்
கரூர் வையாபுரிநகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கோபிநாத் என்றும் கோபிநாத்தின் அம்மா சுகுணா பிஜேபி கட்சியில் மாவட்ட பொறுப்பு வகிக்கும் கணேசமூர்த்தி என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் வாங்கி வட்டி கொடுத்து வந்ததாகவும் கடந்த நான்கு மாதங்களாக வட்டி கொடுக்காததால் கணேசமூர்த்தி கோபிநாத்தின் அம்மாவை மிரட்டியதாகவும், பயந்துகொண்டு அவர் சொந்த ஊரான விருதுநகர் சென்றுவிட்டதாகவும், அதன்பின்பு கோபிநாத்தை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதனால் மண்ணெண்ணெய் எடுத்துக்கொண்டு வந்து ஊற்றி கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேற்படி நபரை தாந்தோனிமலை போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வருவாய் இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
இதனால் தங்களது தேவைகளுக்காக வங்கி தனியார் நிதி நிறுவனம் மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் கடனை திரும்ப செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.