அரசியல்

எஸ்.வி.சேகரை எல்லாம் பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை.. முதல்வர் சாடல்

திண்டுக்கல் செய்தி 06.08.2020திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மாவட்டத்தில்
நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் கொரானாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி, சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்அனைத்து துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறு-குறு -நடுத்தர தொழில் முனைவோர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன்
தனித்தனியே கலந்துரையாடினார்திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு கோடி 88 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை தொட்டிகள், புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தொடர்ந்து 8 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்மாவட்ட சமூகநலத்துறை வேளாண் துறை வருவாய் துறை மாற்றுத்திறனாளிகள் துறை வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு மூலம் பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3530 பயனாளிகளுக்கு வழங்கினார்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில்இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைப்புநயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்
நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும்எஸ்.வி.சேகரை எல்லாம் பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை ; அவர் ஏதாவது பேசுவார் ; வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்வார்…
அவர் மொதல்ல எந்த கட்சியில இருக்காருன்னே தெரியல – என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.ஜெ.ரியாஸ் கான்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button