கோக்கு மாக்கு

முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருக்கோவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததையடுத்து இன்று சங்கரநாரயணசுவாமி கோவில் காலை 6:30 மணிக்கு திறக்கப்பட்டது. சுவாமியை தரிசிக்க உள்ளூர் வாசிகள் காலை முதலே கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்கிறார்களா என மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் இன்று ஆய்வு நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 
அரசு அறிவித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறும் பட்சத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  கோவிலை சுற்றி உள்ள கடைகளில் பக்தர்கள் பொருட்கள் வாங்கும் போது முகக்கவசம் அணிந்தது இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்த பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்…


காத்திருந்து கோவில் திறக்கபட்டதும் ஒவ்வொருவராக வரிசையில் கோவில் உள்ள செல்வார்கள் முகக் கவசம் கைகளில் கிருமி நாசினி தெளிக்க பட்ட பின்னரே அனுமதிகபட்டனர்.. பக்தர்கள் கோவில் உள்ளே வரைப்பட்டு உள்ள கட்டத்திற்கு உள்ள நின்று தரிசனம் செய்யும் அறிவுறுத்த பட்டது
மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோர் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது…  முதல் நாள் என்பதாலும் வெளி மாவட்ட பக்தர்கள் வருகை இல்லாதாலும் குறைந்த அளவிலான பக்தர்களே கோவில் தரிசனம் செய்து சென்றனர்

சங்கரன்கோவில் செய்தியாளர் முருகேசன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button