பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலகின் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்குகிறது. பழனி நகருக்கு நாள்தோறும் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆந்திரா,கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் இருந்து நாள்தோறும் அதிகப்படியான பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில் திருக்கோவில் இணை ஆணையராக இருந்த
ஜெயச்சந்திர பானு ரெட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்து அறநிலை துறை சார்பாக
புதிய கூடுதல் இணை ஆணையராக நடராஜன் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
இவர் பதவியேற்ற உடன் அனைத்து நிருபர்கள் மற்றும் திருக்கோயில் அதிகாரிகளின் முன்னிலையில் திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பக்தர்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். திருக்கோயிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று இவர் பொறுப்பேற்ற நிலையில் திருக்கோயில் அதிகாரிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் கல்லூரி விடுதிகள்,அன்பு இல்லம், பள்ளிக்கூடங்கள், போன்றவற்றில் வேலை செய்யும் அதிகாரிகளும் அலுவலர்களும் இணை ஆணையரை சந்தித்து பூக்கொத்துகள் மற்றும் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பழனி செய்தியார் ரியாஸ்