கோக்கு மாக்கு

புதுக்கோட்டை வரதராஜப்பெருமாள் மார்க்கெட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தார்.

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் வரதராஜ பெருமாள் மார்க்கெட் உள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவ்வழியாக செல்வோரை ஆபாச வார்த்தைகளில் கூறியும் கற்களை கொண்டு அடித்தும் சிறுபிள்ளைகளை கண்டால் அடித்தும் இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் தண்டபாணிக்கு பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.

இதயடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் உடனடியாக மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டு மனநல மருத்துவமனையில் சேர்க்க ஆவண செய்தார். உடனடியாக அங்கு வந்த அலுவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பெண் அனைவரையும் ஆபாச வார்த்தைகளை திட்டியபடியே இருந்தார். அதனை ஒரு பெரிய பொருட்டாக எடுக்காத அதிகாரிகள் மிகவும் சாதுர்யமாக பேசி அந்தப் பெண்ணை மனநல காப்பக வாகனத்தில் ஏற்றி சென்றனர். பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் கிடைத்ததும் அந்தப் பெண்ணை சாதுர்யமாக பேசி மீட்டு காப்பகத்தில் சேர்த்த கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணிக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button