ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விவசாய திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்,சிறு குறு விவசாயிகளுக்கு நான்கு மாதத்துக்கு ஒரு முறை இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் திட்ட மோசடி சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, தாலுக்கா செயலாளர் ஆனந்தராசு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, விவசாய சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் வெங்கடாசலம் மற்றும் விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா